இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெண்டர் எடுத்த ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியில் இருந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைக்காமல் புதிதாக பணியாளர்களை நியமித்து உள்ளனர். குறிப்பாக கொரோனா கால கட்டத்தில் தங்கள் உயிரை பயணம் வைத்து துய்மை பணியில் ஈடுபட்டு வந்தோம். தற்பொழுது புதிதாக டெண்டர் எடுத்த நிறுவனம் மேலும் அந்த நிறுவனம் புதிதாக பணியில் சேர்க்கும் நபர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலை வழங்குகி வருவதாக பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனை கண்டித்து தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து என்எல்சி நகர நிர்வாக அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வில்லை என்றால் என் நெய்வேலி நகர அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
செய்தியாளர்; தே. தனுஷ்

No comments:
Post a Comment