கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் 17 ஆண்டிற்கு பிறகு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பூலோக கைலாய மென்னும் க்ஷேத்திர மாகியே சித்தர் போற்றும் திருச்சித்திரக்கூடம் மெனும் சிதம்பரத்திற்கு கீழ் திசையிலுள்ள மீதிகுடி கிராமத்தில் ஏழுந்தரளியுள்ள திரெளபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் சிறப்பு ஓர் ஆண்டிற்கு ஒரு முறை காப்பு கட்டி நாற்பத்தி எட்டு நாட்கள் பாரதம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த தீமிதி திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் இது இந்த கோவிலின் வழக்கமாகும்.
மேலும் தற்போது 2005 ஆண்டிற்கு பிறகு 03.05.2022 அன்று ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை துவங்கி 05.05.2022 வரை யாகசாலை நடைபெற்று.இதனைத் தொடர்ந்து 06.05.2022 காலை 9 மணிக்கு விநாயகர் கும்பாபிஷேகம் 9:15 மணிக்கு கிளியாளம்மன் கும்பாபிஷேகமும், 9:30 முதல்10 மணி வரை ஸ்ரீ திரௌபதி அம்மன் விமானம், மூலவர் ஆஞ்சநேயர் நவகிரகங்கள் பரிவாரங்கள் கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு அக்னி வீரன் கும்பாபிஷேகமும், 10:20 மணிக்கு அணைத்து சன்னதிக்கும் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் அனைத்து ஆலயங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆனது கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் ஏராளமான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் பங்கேற்று தரிசனம் பெற்று சென்றனர்.
மேலும் கொடியேற்றம் தொடங்கி நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற உள்ளது.


No comments:
Post a Comment