கடலூர் மாவட்டம், வடலூர் கலைஞர் நகர் முத்துக்கண்ணு தெருவில் வசிப்பவர் சிவக்கொழுந்துவின் மகன் ராஜேந்திரன் இவரின் வீட்டு தோட்டத்தில் இன்று அதிகாலையில் அறியவகை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்துள்ளார்.
இதனை பார்த்த ராஜேந்திரன் அச்சம் அடைந்து குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் அவர்களின் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிக்கும் கருவிகள் மூலம் விரைந்து செயல்பட்டு அப்பாம்பை சாமர்த்தியமாகப் பிடித்தனர்.
தீயணைப்புத் துறையினரால் பிடிபட்ட அப்பாம்பு 5 அடி நீளம் கொண்ட அரிய வகை கண்ணாடி விரியன் இனத்தைச் சேர்ந்த கொடிய விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. குறித்த நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே, அப்பகுதியினர் தீயணைப்புத் துறையின் துரித செயல்பாட்டைப் பாராட்டினர்.
செய்தியாளர்;தே. தனுஷ்.

No comments:
Post a Comment