விருதாச்சலம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்.!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

விருதாச்சலம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்.!!!


விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடலூர்மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட  இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் திருவதிகை குளம் 60 சென்ட் அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்திருந்தது.


இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூர்வார வேண்டுமென கடந்த 30 ஆண்டுகளாக பொது மக்கள் போராடி வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் வருவாய்துறை உதவியோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் செல்வகுமாரி பணி மேற்பார்வையாளர் சரளா ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/