கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் நிகழ்ச்சியின் ஒருநாள் கருத்தரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒருநாள் கருத்தரங்கில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்குழைந்தைகளின் விகிதாச்சாரம் குறைவின் காரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாவது குறித்தும் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்க வேண்டும், பெண்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும், பெண்குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, பெண்சிசுவதை தடுப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. இதில் ஊராட்களின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, முருகன், ஒன்றிய குழு தலைவர் பொறுப்பு பூங்கோதை, விரிவாக்க அலுவலர் பாரதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment