சீமானை கண்டித்து புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் சீமான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

சீமானை கண்டித்து புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் சீமான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


ராஜீவ்காந்தி, பெண் எம்பி ஜோதி மணியை தரக்குறைவாக பேசிய சீமானை கண்டித்து புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் சீமான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 


கடலூர் மாவட்டம், புவனகிரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சீமான் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் சீமான் ராஜீவ் காந்தி பற்றி பேசியதும் பெண் எம்பி ஜோதிமணி பற்றி தரக்குறைவாக பேசியதை மற்றும் 400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர் ராஜீவ்காந்தி என பேசியதை கண்டித்து


புவனகிரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமையில் சகஜானந்தன், அருண், ஏ எம் அஜித், ருத்ரன் ,பாலமுருகன், வெள்ளை பார்த்திபன், விநாயகம் ,சுதாகர், திருவாசகம்மூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் திடீரென ஒன்றுகூடி வெள்ளாற்று பாலம் அருகாமையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு முன்பு சீமானின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புவனகிரியில் பரபரப்பு ஏற்பட்டது .

No comments:

Post a Comment

*/