கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 10 ஆண்டுகளாக உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்த தெய்வத்திரு. பே.பாமினி அவர்கள் பணிக்காலத்தில் கடந்த24/05/ 2022-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின விழா வட கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் மேல் புவனகிரி வட்டார கல்வி அலுவலர் திருமதி எஸ். லட்சுமி அவர்களின் தலைமையில் ஆசிரியர் பே. பாமினி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி அவரின் நினைவாக பள்ளி மாணவர்களுக்கு நினைவு நூலகம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.ராணி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் ஆ.ஆனந்த பெலிக்ஸ் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனரும் புவனகிரி ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம் தலைவர் பி.சா.துரை மணி ராஜன் அவர்கள் கலந்துகொண்டு மறைந்த ஆசிரியர் பே. பாமினி அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார் மேலும் இந்நிகழ்ச்சியில் ஆர். சக்திவேல் ஆசிரியர் பயிற்றுநர் தலைமையாசிரியர் ஆர். குமார். இரா.இராமசஞ்சிவி வை.அருணகிரிநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் பெரும் திரளாக விழா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மறைந்த ஆசிரியர் பே. பாமினி அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் சார்பாக ரூபாய் 1.00.000/மதிப்பில் அவரது பெயரில் அப்பள்ளியில் நினைவு நூலகம் அமைத்து வட்டார கல்வி அலுவலர் எஸ்.லட்சுமி அவர்களுக்கு நினைவு புத்தகம் வழங்கினார் மேலும் மாணவர்களுக்கான இருக்கை உள்ளிட்ட தளவாட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
முன்னாள் மாணவர்களின் சார்பில் அப்பள்ளிக்கு கணினி ஸ்மார்ட் கிளாஸ் கணினி வகுப்பறை மாணவர்களுக்கு அமைத்துக் கொடுத்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் முன்னாள் மாணவர்களின் சார்பில் செந்தில் நன்றி கூறினார்


No comments:
Post a Comment