கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம்.


கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தில் கூடுதல் ஆட்சியர் மனு நீதி நாள் முகாமை ஒட்டி கடலூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் கு. குபேந்திரன் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. 


இந்த மருத்துவ முகாமிற்கு கால்நடை உதவி மருத்துவர் மதன்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர் சாந்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆரோக்கியசாமி ஆகியோர், கால்நடைகளுக்கு தடுப்பூசி ,செயற்கை முறைக் கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்கம் ,கன்று பரிசோதனை ,சினைப் பரிசோதனை ,குடற்புழு நீக்கம் ,ஆகிய மருத்துவ பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.


No comments:

Post a Comment

*/