மேலக்குறிச்சி கிராமத்தில் மனு நீதி நாள் 336 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்,மற்றும் எம்எல்ஏ வழங்கினார்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 May 2022

மேலக்குறிச்சி கிராமத்தில் மனு நீதி நாள் 336 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்,மற்றும் எம்எல்ஏ வழங்கினார்கள்


மேலக்குறிச்சி கிராமத்தில் மனு நீதி நாள்  336 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்,மற்றும் எம்எல்ஏ  வழங்கினார்கள்   


கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா, மேலக்குறிச்சி கிராமத்தில்  நடந்த மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விருத்தாசலம் எம்எல்ஏ,  ராதா கிருஷ்ணன் ஆகியோர்  336 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 


நல்லூர் ஒன்றியம், வேப்பூர் தாலுக்கா, மேலக்குறிச்சி கிராமத்தில் மனுநீதிநாள் முகாமிற்கு   கடந்த 4- ந் தேதி பொதுமக்களிடம் வேப்பூர் தாசில்தார் மோகன்,  சமூக நல வட்டாட்சியர் அந்தோணிதாஸ், மண்டல வட்டாட்சியர் மஞ்சுளா , கிராம நிர்வாக அலுவலர் அருண் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலர்கள் கோரிக்கை மனு பெற்றனர் 


அதனை தொடர்ந்து மே 27 ந்தேதி நேற்று  கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில்  மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது 


நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் வரவேற்றார்,  கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் ஜி கிரியப்பானவர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சுப்பையா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்  


முன்னதாக பேசிய மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், மேலக்குறிச்சி அரசு உயர்நிலை பள்ளிக்கு வகுப்பறை கட்ட  நிலம் ஒதுக்கி  தருமாறு கோரிக்கை விடுத்தார்


அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்  ஆகியோர்  336 பயணாளிகளுக்கு 88 லட்சத்து,54 ஆயிரத்து, 432 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 


தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம்  பேசும்போது கடலூர் மாவட்டத்தில் 64 சதவிகித மக்கள் ஊரக பகுதியில் வசித்து வருகின்றனர் அதனால் நாம் நீர் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில், 6 வயதுகுட்பட்ட சுமார்  29 ஆயிரம் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடுகளுடன் வளர்கிறது அதை போக்க சுகாதாரத்துடன் வளர்க்க வேண்டும், மேலும்  வேப்பூர் பகுதியில் குழந்தை திருமணம்  நடைபெறாமல் தடுக்கவேண்டும்

,6400மையங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது ஆகவே வீட்டிலுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், என பேசினார்


இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்  அருண், கலையரசன், ராஜாமணி, பிரியா, பெரியசாமி, ரவிக்குமார் வருவாய் ஆய்வாளர்கள் பழனி மாலா,நல்லூர் பிடிஒ சிவகுருநாதன், சங்கர் , நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன், கண் மருத்துவர் சுமதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் வேப்பூர் தாசில்தார் மோகன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/