பண்ருட்டியில்முதன் முதலாக சென்னை. பெருங்குடி ஜெம் மருத்துவமனை. பண்ருட்டி பார்த்தசாரதி நண்பர்கள் இணைந்து நடத்தும் மெகா இலவச மருத்துவ முகாம் !!!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள KSR சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மருத்துவ முகாமினை தலைமை ஏற்று திரைப்பட நடிகர் இயக்குனர் ரமேஷ் கண்ணா துவங்கி வைதனர்.
ஜெம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் பித்தப்பை கற்கள் சிறுநீரக கற்கள். குடல் இறக்கம் .உடல்பருமன். இதய பரிசோதனை. கர்ப்பப்பை கோளாறுகள் .கல்லீரல் வீக்கம். குடல்புண் ஜீரண மண்டல புற்றுநோய் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். அறுவைசிகிச்சை தேவைப்படுவோருக்கு 50 % சிறப்பு சலுகை வழங்கப்படும்.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உடல் பருமன் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
நோயாளிகள் ஒவ்வொருவரும் உடல்நிலையை பற்றி மருத்துவர்களிடம் கூறி ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் இலவசமாக பெற்றுச் சென்றனர். இந்த முகாமில் ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள் 1000-க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment