கடலூர் மாவட்டம் ,விருத்தாசலத்தில் கத்தார் ஆம்பல் தமிழ் சங்கம் மற்றும் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் இணைந்து நடத்திய உலக சாதனைக்கான இரண்டு மணி நேரம் இடைவிடாத புத்தக வாசிப்பு நடைப்பெற்றது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பெரும்பான்மையோர் செல்போன் பயன்படுத்தி விளையாட்டு, பொழுதுபோக்கு வீடியோக்கள் இடைவிடாத பார்த்த வண்ணம் இருந்து வந்தனர்.
மேலும் அந்த கால கட்டத்தில் செய்தித்தாள்கள் மற்றும் வார, மாத இதழ்கள் கிடைக்காது இருந்து வந்ததால் வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. இதனையடுத்து கற்றல் மற்றும் வாசித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் கத்தார் ஆம்பல் தமிழ் சங்கம் மற்றும் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி சார்பில் இன்று இடைவிடாது வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் 610 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு,பல்வேறு தலைப்புகளில் உள்ள நூல்களை 2 மணி நேரம் இடைவிடாது வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் கொளஞ்சியப்பர் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜவேல், கத்தார் ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தின் இயக்குனர் ரவி கோவிந்தராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சண்முகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment