வரம்பனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவருடன் கிராம மக்கள் வாக்குவாதம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

வரம்பனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவருடன் கிராம மக்கள் வாக்குவாதம்

வரம்பனூர் ஊராட்சி  கிராம சபை கூட்டத்தில் தலைவருடன்  கிராம மக்கள் வாக்குவாதம் நிலவியதால் பரபரப்பு.!!!


கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.


இங்கு, தொழிலாளர் தினத்தையொட்டி, மே மாதம் ஒன்றாம் தேதி நேற்று   ஊராட்சி மன்ற  தலைவர் செல்வி சாமிதுரை தலைமையில் கிராம சபைக் கூட்டம் தொடங்கியது. துணைத் தலைவர் முத்துலட்சுமி மணிகண்டன், சத்துணவு அமைப்பாளர் ராதாபாய் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்  ஜெயபிரகாஷ் வரவேற்றார்.


இந்நிலையில், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி செயலாளர் படிக்க தொடங்கிய போது கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர்  கிராம சபைக் கூட்டத்திற்கு முறையான அறிவிப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேட்டு  ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.‌ 


அதற்கு ஊராட்சி தலைவர் முறையான பதில் அளிக்காததால், அதிருப்தி அடைந்தவர்கள்  கிராம சபைக் கூட்டத்தை கூறினார்கள்  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

*/