விருத்தாசலத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

விருத்தாசலத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகம்!!!


மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை 1, 2 பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மண்டல செயலாளர் தலைமையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகமாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினர்.


மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன் நகர துணை செயலாளர் ராமு பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி மாவட்ட பிரதிநிதி பழனிசாமி சுப்பிரமணி முருகவேல் அந்தோணிராஜ் செயலாளர் செல்வராஜ் பொன்னிவளவன் மணிவண்ணன் இந்தக் கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

*/