இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் கேகர் பாபு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் கேகர் பாபு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் விசாரணை மேற்கொள்ள சென்ற துணை ஆணையர் தலைமையிலான குழுவை கோவிலுக்குள் அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர், இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல், இருப்பதை பதிவு செய்துள்ளோம் என்றும், சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/