வேப்பூர் கூட்டுரோடு அருகே நடந்த பைக் விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் , கே கே நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் ராஜ்குமார் (வயது23) என்பவர் தனது நண்பரான பெரம்பலூர் பாரதிதாசன் நகர் 3 வது தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் குகநாதன் (வயது 26) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ராஜ்குமார் அக்கா வீட்டிற்கு டிஎண், 46, ஏபி, 1883 என்ற எண்ணுள்ள யமாஹா எம்7, பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் சென்னையிலிருந்து பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.இருசக்கர வாகனத்தை ராஜ்குமார் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் மே 24 ந் தேதி காலை 6.30 மணியளவில் கடலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ராஜ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பின்னால் உட்கார்ந்து லவந்த குகநாதன் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் படுகாயமடைந்த குகநாதனை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
உயிரிழந்த ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment