இதில் மேலாளர் சுரேந்தர் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவரை நிர்வாகம் எந்த ஒரு காரணமும் இன்றி வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் இன்று பணிக்குச் செல்லாமல் திடீரென்று மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் இதனால் மருத்துவமனையில் துப்புரவு பணிகள் ஸ்தம்பித்து நின்றது பின்னர் மருத்துவமனை அதிகாரிகள் மருத்துவர் குமார் மருத்துவர் பாலகுமாரன் மருத்துவர் காரல் மற்றும் ஊழியர்களின் நிறுவனமான ஸ்மித் நிறுவன அதிகாரி கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வெள்ளிக்கிழமையன்று தலைமையிடத்தில் இருந்து அதிகாரிகள் வருகிறார்கள் என்றும் அவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள் இதனை ஏற்றுக்கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி ஊழியர்கள் கலைந்து பணிக்கு சென்றனர் முன்னதாக மாற்றாதே மாற்றாதே மேலாளரை மாற்றாதே என்று கோஷங்கள் எழுப்பினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment