இந்த மனுநீதி நாள் முகாமில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், பவன்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பேசுகையில் முகாமில் 509 மனுக்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 412 ஏற்பு செய்யப்பட்டு அதற்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் குடிநீர் ஆதாரத்திற்கு செக்டாம் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்றும், மக்களை தேடி மருத்துவம், மாவட்ட சமூக நல வளர்ச்சி சார்பில் குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
பட்டயபடிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதம்1000 ரூபாய் வழங்கும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு 3 ஏக்கர் நிலம் மனுநீதி நாள் மேடையிலேயே வழங்கப்பட்டதற்கு மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார்.
மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் மனுக்களை 1மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும் பல்வேறு துறை சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, இலவச தையல் இயந்திரம், இலவச இஸ்திரி பெட்டி, கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மூக்கு கண்ணாடி , கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக பள்ளி மாணவிகள் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:
Post a Comment