கடலூர் மாநகராட்சியில் குப்பை அள்ளிச் செல்ல 30, மூன்று சக்கர வாகனங்களை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கொடியசைத்து துவக்கி வைத்து துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.
கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் குப்பை அள்ள முறையான வாகன வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் துப்புரவு ஊழியர்கள் மிதிவண்டிகளில் குப்பைகளை எடுத்து செல்வதால் நகர் முழுவதும் குப்பையாகவும் சூழலும் நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று கடலூர் மாநகராட்சி வளாகத்தில் மேயர் சுந்தரி ராஜா 30 மூன்று சக்கர வாகனங்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். மேலும் வாகனங்களுக்கு பூஜை செய்து கொடியசைத்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சித் துணை மேயர் ப.தாமரைச்செல்வன், ஆணையர் விஸ்வநாதன், நகரசெயலாளர் கே.எஸ். ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ஜெயசீலன், ஏ.ஜி.தஷ்னா, பிரசன்னா, அருள்பாபு, சரவணன், சாய்துனிசா சலீம், புஷ்பலதா, பார்வதி, மு.சரிதா, செந்தில்குமாரி இளந்திரையன், விஜயலட்சுமி செந்தில், த.சங்கீதா, மகேஸ்வரி,சுதா அரங்கநாதன், சுபாஷினி, மற்றும் பாலாஜி, சரத் துப்புரவு பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment