பண்ருட்டி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

பண்ருட்டி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் !!!

பண்ருட்டி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம். பெருந்தலைவர் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி 15-வது மத்திய நிதிக்குழு மானியம் 2021 -22 ஆண்டுக்கு 1.40 கோடி மதிப்பீட்டில் பணிகளை எவ்வாறு தேர்வு செய்திட ஒன்றிய கவுன்சிலர்கள்மாதாந்திரக் கூட்டம் பெருந்தலைவர் பாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் நத்தம் ஊராட்சியில் பம்புசெட் அமைத்தல் . வீரசிங்கன் குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைத்திட வழிவகுத்தல் மற்றும் சிலம்பிநாதன்பேடட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அமைத்தல் .கிணற்றிக்கு மோட்டார் உதிரிப் பாகங்கள். ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல் .புதிய பைப் லைன் அமைத்து சொரத்தூர் - கீழ கொள்ளை சாலை அமைத்தல். தார்சாலைகள் அமைத்தல்.புதிய மின் மோட்டார் அமைத்தல். சென்னை அண்ணா பல்கலைக்கழக குழுவால் மண் பரிசோதனை மேற்கொள்ள வழிவகுத்தல் வேககொல்லை பழைய துணை சுகாதார மையம் கட்டிடம் அமைத்தல் பத்திரக்கோட்டை பழைய துணை சுகாதார மையம் அமைத்தல்.


ஒன்றிய பொது நிதியிலிருந்து மன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் மற்றும் ராதிகா ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/