வேப்பூர் அருகே சப்தகன்னிகள் ஆலய மகா கும்பாபிஷேகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

வேப்பூர் அருகே சப்தகன்னிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்


வேப்பூர் அருகே சப்தகன்னிகள் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது 


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ சப்த கன்னிகள் ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானை ஸ்ரீ முனியப்பன் ஸ்ரீ கருப்பையா குள்ள கருப்பு ஸ்ரீ நாககன்னி ஆகிய தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின விசேஷ திரவிய ஹோமம் மூலமந்திர ஹோமம் மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது இன்று காலை இரண்டாம் கால பூஜை நடைபெற்று மேளதாளங்களுடன் புனித நீர் கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/