பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று (03-05-2022 -ந்தேதி செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில் நெய்வேலியில் நடைபெற்றது
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன
மக்களை வாட்டி வதைக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கந்துவட்டிக் கொடுமைகளை கண்டித்து, பண்ருட்டி நகரில் எதிர்வரும் 16-05-2022 தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி-கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் எதிர்வரும் 27-05-2022 தேதி காலை 10:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டது.
கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. செந்தில்முருகன்மாவட்ட துணைத்தலைவர் மு.அமர்நாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் S.S.ஸ்ரீகாந்த், மாவட்ட அலுவலக செயலாளர் ரேவந்த் ஆண்டணி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் நடராஜன், நெய்வேலி சட்டமன்ற தொகுதி தலைவர்.சி.வினோத்குமார், நெய்வேலி தொகுதி பொதுச்செயலாளர். சி.ஆறுமுகம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பொருளாளர். கருணாகரன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் தனசேகரன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொருளாளர் ரஜினிகாந்த், நெய்வேலி நகர தலைவர். ராஜேந்திரன், பண்ருட்டி நகர தலைவர் மணி, பண்ருட்டி ஒன்றிய தலைவர் பழனி, பண்ருட்டி ஒன்றிய செயலாளர் ஐயப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிற்பி. செந்தில்குமார், அண்ணாகிராம ஒன்றிய அலுவலக செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; தே. தனுஷ்

No comments:
Post a Comment