கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி மேட்டு தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விஷகதண்டுகள் கூடுகட்டி இருந்தது.
மேலும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது கதண்டுகள் கடித்தன பிறகு ஆடுகள் அலறும் சத்தத்தைக் கேட்டு பகுதி மக்கள் பார்த்தபோது கதண்டுகள் மேலே சுற்றுவதை பார்த்து தகவலை ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அவர்களுக்கு தெரிவித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு உடனடியாக நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் முன்னணித் தீயணைப்பு வீரர்கள் பன்னீர்செல்வம் படை வீரர்கள் ஐயப்பன் பாலு மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் மூலம் விஷகதண்டு கூட்டினை முற்றிலும் அழித்தனர் உடன் கிராம மக்கள் தமிழரசன் ரஞ்சித்குமார் கார்த்தி ராஜா மோகன்தாஸ் ராமு ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டு அழிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர் மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்
செய்தியாளர்;கே,பாலமுருகன்.

No comments:
Post a Comment