காட்டுமன்னார்கோயில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

காட்டுமன்னார்கோயில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.


காட்டுமன்னார்கோயில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவர் நேற்று மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  கண்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா மிகக்கடுமையாக காலணியால்  தாக்கியதை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சிகாமணி தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் கொளஞ்சி  மாவட்ட பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மா வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற  துணைத்தலைவர் பதிவிலிருந்து பணிநீக்கம் செய்யவேண்டும் வார்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.


முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்  திடீரென காட்டுமன்னார்கோயில் ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது 


No comments:

Post a Comment

*/