அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஆணைப்படி சிவக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் சிறப்பு பேரூராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்க்கரசி தலைமையில் அண்ணாமலை பேரூராட்சி தலைவர் பழனி முன்னிலையில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் செயல் அலுவலர் பாலமுருகன் கலந்து கொண்டனர், மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட அலுவலர்கள் பணியாளர்கள் களப்பணியாளர்கள் ஆகிய உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை உறுதிமொழி எடுத்துக்கொண்டனார் பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சி அண்ணாமலைநகர் முக்கிய வீதிகளில் புகையிலை எதிர்ப்பு தினம் முழக்கங்களுடன் பேரணி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிவக்கம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/