கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம், கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் குட்டி ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிள்ளை நகரக் கழகச் செயலாளரும் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான கிள்ளைரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் சிறப்பான செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பேரூராட்சி சார்பாக அனைத்து வார்டுகளில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழக அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகிய இருவருக்கும் நடுவே கலைஞர் சிலை அமைக்க வேண்டும் என்றும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/