சர்வதேச செவிலியர்கள் தினம் சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிமா சங்க வட்டார தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.அரிமா சங்க தலைவர் தங்க செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.செயலாளர் சௌந்தரராஜன் வரவேற்றார்.அற்பணிப்பு உணர்வோடு சேவை பணியாற்றும் செவிலியர்களை டாக்டர். பரணிதரன் மற்றும் லயன் சண்முகம்,தில்லை ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் சால்வை அணிவித்து , நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இறுதியில் லயன் ராஜசேகர் நன்றி கூறினார்.
செய்தியாளர்: கே, பாலமுருகன்

No comments:
Post a Comment