மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்குழந்தை திருமணம் நடை பெறுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்குழந்தை திருமணம் நடை பெறுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமணம் நடை பெறுவதை தடுப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட சமூக நல அலுவலர் ஏ.சித்ரா தலைமையில் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் ஏ.சித்ரா தமிழ்தாய் வாழ்த்துடன் தொடக்கி வைத்தார் மைய நிர்வாகி ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் பா. சுகன்யா கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார் மா .கண்ணன் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் .


ஆர். லட்சுமி வட்டார அலுவலர் கலந்து கொண்டடுபெண் கல்வி மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசாங்க திட்டங்கள் குறித்தும் கல்வி குறித்தும் கருத்துரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மேல் புவனகிரி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஏ.ஜெனிடாமேல் புவனகிரி வட்டார மருத்துவ அலுவலர் எம்.சிவகுமார் கடலூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சைல்டு லைன் முகுந்தன் கடலூர் மாவட்ட மைய நிர்வாகி ஒருங்கிணைந்த சேவை மையஅலுவலர் பா.சுகன்யா ஆகியோர் கலந்துகொண்டு பெண்குழந்தை முக்கியத் முக்கியத்துவம் மற்றும் PCPNDT சட்டம் குறித்தும் குழந்தை திருமணம் தடை சட்டம் மற்றும் போஸ்கோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.


நிகழ்ச்சியில் மேல் புவனகிரி ஒன்றிய குழு தலைவர் சிவப்பிரகாசம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வி. வாசுதேவன் மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ஏ. சுந்தரம் (வ.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.வீராங்கன் (கி.ஊ)ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:

Post a Comment

*/