விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்.


விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் இன மக்களுக்கு மனைவரி பட்டா வழங்கிட கோரி வருகின்ற 10/05/22 தேதி அன்று பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியர் தனபதி அவர்களின் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பழங்குடி மக்கள் விடுதலை கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ்,நல்லூர் ஒன்றிய தலைவர் வேல்முருகன் ஒன்றிய அவைத்தலைவர் பழனி பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சி மாநிலத் தலைவர் தங்கமணி மற்றும் அனைத்து மக்கள் சேவை இயக்கம் மாவட்ட செயலாளர் வீரமணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் அனைத்து மக்கள் சேவை இயக்கம் நிறுவனத்தலைவர் தங்கம் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் தனபதி அவர்கள் ஒரு மாத காலத்திற்குள் பழங்குடி இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/