தி.மு.க., ஓராண்டு சாதனை விருத்தாசலம் விழாக்கோலம், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில்தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை வரவேற்று, விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் மகனும், கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி நிர்வாக இயக்குனருமான வெங்கடேசன். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி, குளிர்பானங்கள் வழங்கினார்.
விழாவில் தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள், கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment