வடலூர் தூய இருதய ஆண்டவர் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

வடலூர் தூய இருதய ஆண்டவர் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

வடலூர் தூய இருதய ஆண்டவர் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், வடலூரிலில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 03 தேதி சிறப்பு தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.


இந்த ஆண்டிற்கான திருவிழாவின் முக்கிய நிகழ்வான தூய இருதய ஆண்டவர் கொடியேற்ற நிகழ்வு வடலூரில் ‌உள்ள இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது இதனைதொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் G. பீட்டர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார் பின்னர் திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தூய இருதய ஆண்டவரின் திரு உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது.

வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்திலன் பங்குத்தந்தை M. லூர்து ஜெயசீலன் மற்றும் உதவி பங்குத்தந்தை A. ஜெயபாலன் அவர்களால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது இந்நிகழ்வில் வடலூர் பங்கை உள்ளடக்கிய கொளக்குடி மருவாய் குறிஞ்சிப்பாடி கல்குணம் பெத்தநாயக்கன் குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வடலூர் பங்கு பேரவை குழு உறுப்பினர்கள் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் இளம்பெண்கள் கலந்து கொண்டனர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆடம்பர தேர் பவனி வருகின்ற 03.06.2022 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*/