கடலூர் மாவட்டம், புவனகிரியில் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாடு முழுவதும் மே 25 முதல் 31 வரையிலும் தமிழகம் முழுவதும் மே 26 முதல் 27 வரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அதனடிப்படையில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார்.
புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து மத்திய அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட்டு விலை உயர்வை மொத்தமாக திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும் ,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிட ,வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 வழங்கிட வேண்டும் என்றும் ,ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திட, நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரவேண்டும், வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற ,அரசு துறையில் காலிப் பணியிடம் முழுமையாக நிரப்பிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கி பேசினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு மணி, பிரபு ,கலைவாணன், ஜெயசீலன், அம்சயால் ,கோபிநாத், குப்புசாமி, விஜய ரமணராஜ் ,அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

No comments:
Post a Comment