தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அழுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எவ்வித பணப்பிடித்தமும் இல்லாமல் இணைத்துக்கொள்ள வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மே-2015 முதல் வழங்க வேண்டும், அரசு ஆணைப்படி மாத இறுதி நாளில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், தேக்கநிலை சிறப்பு ஓய்வூதியம் 2018 முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம், நல்லூர் மற்றும் மங்களூர் கிளை சங்கங்கள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment