இராசேந்திரப்பட்டிணம் கிராமத்தில் புத்தர் மற்றும் அய்யோத்திதாசர் பிறந்த நாள் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் கலாமணி அவர்கள் பங்கேற்று பௌத்தம் குறித்து மக்களிடையே விரிவாக பேசினார்.
இராசேந்திரப்பட்டிணம் கிராமத்தில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையொன்று இருந்தது. இந்த சிலையானது 2016-ம் ஆண்டு சமூக விரோதிகளால் திருடப்பட்டது மேலும் பிடாரி குளமும் புத்தன் ஏரியும் இன்றைக்கும் இருக்கின்றது. வயல்வெளியில் புத்தர் சிலைகளின் சிதிலமடைந்த பாகங்களை ஆங்காங்கே காணமுடிகிறது. இத்தகைய சான்றுகளை வைத்து பார்க்கும்போது ஒரு காலத்தில் இராசேந்திரப்பட்டிணம் கிராமத்தில் பௌத்தம் செழித்து இருந்திருப்பதை உணரலாம்.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். பொது மக்கள் பௌத்தம் குறித்தும் வழிபாட்டு முறைகள் குறித்தும் தற்கால கலாச்சார சீரழிவுகள் குறித்தும் ஆழமாக விவாதித்தார்கள். புத்தர் மற்றும் அய்யோத்திதாச பண்டிதர் குறித்த முழுமையான புரிதலை இந்த விழா மக்களிடையே ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment