காட்டுமன்னார்கோயில் விசிக தொகுதி துணை செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி துணை செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மன்னை சக்திவேல் ராவணன் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா பொன் விழாவாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார் பின்பு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் முன்னதாக வழக்கறிஞர் எஸ் எஸ் ராஜா பிறந்தநாள் விழாவில் புத்தர்சிலை வழங்கி சிறப்பித்தார் உடன் காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் மெய் இளந்தமிழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்
செய்தியாளர்; கே, பாலமுருகன்
No comments:
Post a Comment