தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள தர்காவில் நடைபெறும் சுன்னத் ஜமாத் கொள்கைக்கு எதிரானவர்கள் நடத்தும் இஜ்திமா என்னும் கூட்டத்தை தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கடலூர் மாவட்டம் பணருட்டியில் தமிழ்நாட்டிலேயே மகவும் பிரசித்தி பெற்ற 10 பெரிய தர்காகளில் ஒன்றான ஹஸ்ரத் நூர் முஹம்மத் ஷா வாலியுல்லா தர்கா ஒன்றாகும் இந்த தர்கா மற்றும் தர்கா இடத்தில் உள்ள பள்ளிவாசலில் பாரம்பரியம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஃபாத்திஹா மற்றும் கிரியைகளை தடுக்கும் வகையில் தொடர்ந்து அனைத்து செயல்களும் நடைபெற்று வருகின்றன.



இந்த கூட்டம் நடத்துவதால் தர்காவின் புனித தன்மை மற்றும் சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்படும் உணவு கழிவு போன்றவைகளால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது, கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் பெருமளவில் இருக்கிறது.


ஆகையால் இந்த கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் சார்பாக மனு அளிக்கப்பட்டது.


மாநில அமைப்பாளர் ஏ.எஸ். முஸ்தபா,மாநில இளைஞரணி துணைசெயலாளர் கே.அஸ்லாம்ரஃபி, மாவட்ட தலைவர் அமானுல்லாஹ்,மாவட்ட கௌரவதலைவர் ரஷிம், மாவட்ட செயலாளர் தோஸ்முகம்மது கான், மாவட்ட பொருளாளர் பி.ரத்தார், மாவட்ட துணை செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட துணைத்தலைவர் எம்.பி. அப்துல் ரஷித் மற்றும் மாவட்ட இளைரணி பொறுப்பாளர் ஏ.மன்சூர்அலி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/