காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் கட்சி ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் கட்சி ஆர்ப்பாட்டம்


காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் கட்சி ஆர்ப்பாட்டம்


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு சமையல் கேஸ் விலை உயர்வு வெறுப்பு அரசியல் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது பாதுகாப்புத்துறை எல்ஐசி ஆகியவற்றை தனியாருக்கு விற்பதை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவணன் அனைவரையும் வரவேற்றார் 


இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட செயலாளர் முருகவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் வெற்றி குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்ட குழு உறுப்பினர்கள் புகழேந்தி விமல கண்ணன் கிளை செயலாளர்கள் தனபால், அப்துல் அஜீஸ், தேசிங்கு, ஆனந்த வீரன், மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க மாநிலத் துணைச் செயலாளர் அந்தோணி சிங், ஒன்றிய துணை செயலாளர் மெய் இளந்தமிழன், ராதாகிருஷ்ணன், ரவீந்திரன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மகாராஜன், சரவணன் மற்றும் சி பி எம் எல் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், ராமமூர்த்தி இராசமாணிக்கம், புரட்சிகர சோசலிச கட்சி சார்பில் மாவட்ட குழுவினர் வட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/