ராஜீவ்காந்தி, பெண் எம்பி ஜோதி மணியை தரக்குறைவாக பேசிய சீமானை கண்டித்து சிதம்பரம் காங்கிரஸ் கட்சியினர் சீமான் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து சங்கு ஊதி கொல்லி சட்டி ஏந்தி சவ ஊர்வலமாக காங்கிரஸ் கட்சி மகளிர்அணி மாவட்ட பொதுச்செயலாளர் அஞ்சம்மாள் மற்றும் முன்னாள் மகளிர் அணி செயலாளர் டாக்டர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது.
சிதம்பரம் நகர மகளிர் அணி தலைவர் கவிதா மற்றும் செயலாளர் பார்த்திமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment