கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டுசிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரிஅவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கீரப்பாளையம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்க்கு ஊராட்சி மன்ற தலைவர் கீரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் தையல்நாயகி வரவேற்றார் ஒன்றிய கவுன்சிலர் இளமதி திருமாவளவன் திமுக மூத்த நிர்வாகி தலைமை கழக பேச்சாளர் வீரமணி காங்கிரஸ் மூத்த நிர்வாகி ராதாகிருஷ்ணன் வட்டார தலைவர் செழியன் டாக்டர் அருண் முன்னாள் பட்டுக் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம்வெள்ளை பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் அவர் பேசுகையில் இங்கு பங்கேற்ற பொதுமக்கள் 14 விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர் ஊராட்சி மன்றத் தலைவரும் ஊராட்சி செயலாளரும் பதிலளித்துள்ளனர். அடுத்த கிராமசபை கூட்டத்திற்குள் 14 விதமான கோரிக்கைகளுக்கும் தீர்வுகாண வேண்டும் அப்போதுதான் கூட்டத்தின் சிறப்பு நடைமுறையாக இருக்கும் கீரப்பாளையம் ஊராட்சி இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றிருந்தது ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.
இந்தியா முழுவதும் நம் கிராமம் சிறப்புப் பெற்றது அதேபோல தற்போது சிறப்பு பெற வேண்டும் ஊராட்சி தலைவர் பதவி சிறப்பு வாய்ந்தது அந்த பதவி மூலம் மக்கள் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் தமிழக முதல்வரும் கிராம சபை கூட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் மேலும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்து மரக்கன்றுகள் நட்டு மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் நான் ஐரோப்பிய ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று இருந்தேன் அப்போது ஒரு ரயில்வே நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன் அந்த இரண்டு மணி நேரத்தில் குறைந்தது 10,000 பேர் ரயில் நிலையத்தில் கடந்து சென்று இருப்பார்கள் ஆனால் ஒருவர் கூட குப்பைகளை பொது இடத்தில் வீசாமல் சென்றார்கள்,
கிராமங்கள் முன்னேற வேண்டும் என்று மகாத்மா காந்தி கனவு கண்டார் ராஜீவ் காந்தி அதை சட்டம் ஆக்கினார் பஞ்சாயத்து ராஜ்யம் மக்கள் சேவைக்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும் பொதுமக்கள் சுதந்திரமாகவும் சுகாதாரமாக வாழ வேண்டும் மாவட்டத்தில் அதிகளவில் மழைப்பொழிவு நெய்வேலி நகரமாக உள்ளது இது அறிவியல் உண்மை எனவே நாமும் மரங்களை நட்டு மழை பெறுவோம் இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் தனி வட்டாட்சியர் சிவகுமார் வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் கூட்டுறவு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் மணிமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர் ஊராட்சி செயலாளர் தேவதாஸ் கூட்ட முடிவில் நன்றி கூறினார் .
செய்தியாளர்; வீ.சக்திவேல்.


No comments:
Post a Comment