கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியத்தில் மே 1- ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நல்லூர் ஒன்றியம், வேப்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார்.
ஊராட்சி துணைத் தலைவர் மஞ்சுளா செல்வராஜ், நல்லூர் துணை பி.டி.ஓ., நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
நகர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.ஓவர்சீயர் திருமூர்த்தி, துணைத் தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலாளர் தங்கவேல் வரவேற்றார். ரேஷன் கடை விற்பனையாளர் அசோக்குமார், மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சேப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை தீனதயாளன் தலைமை தாங்கினார்.
ஓவர்சீயர் சங்கர், துணைத் தலைவர் கட்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சரவணன் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பா.கொத்தனூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் முனியன் தலைமை தாங்கினார். கிராம சபை அமைப்பாளர் ஜெயந்தி,
துணைத் தலைவர் வசந்தா நாராயணசாமி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஞானவேல் வரவேற்றார். அங்கன்வாடி அமைப்பாளர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பயர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் ராமசாமி தலைமை தாங்கினார். பொறியாளர் சாந்தி, துணைத் தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சொக்கலிங்கம் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.



No comments:
Post a Comment