பெண்ணாடம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு - போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

பெண்ணாடம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு - போலீசார் விசாரணை.


பெண்ணாடம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு போலீசார்  விசாரணை.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலை அகரம் பகுதியை  சேர்ந்தவர்  ராஜசெல்வம் (வயது 42) அரசு பேருந்தில் நடத்துனராக உள்ளார். இவரது மனைவி புகழ்செல்வி(வயது 35) இவர்களுக்கு 1 மகன், 1மகள் உள்ளனர். கணவன் மனைவி குழந்தைகளுடன்  நேற்று  இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.


அதிகாலை 3,மணியளவில் வீட்டின் முன்பக்க கதவு வழியாக உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் புகழ்செல்வியின் வாயை துணியால் மூடி அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.


இதில் பதறிப்போன புகழ்ச்செல்வி கத்தி கூச்சலிட்டார். புகழ்ச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு  அவரது கணவர் ராஜா செல்வம் மற்றும்  பக்கத்து பக்கத்து  வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்மநபரை துரத்தி பிடிக்க முயன்றனர் ஆனால் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.


இதுகுறித்து தகவலறிந்து பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

மேலும், கைரேகை நிபுணர் ஸ்ரீதர் மற்றும் மோப்பநாய் வழவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்

கணவருடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர் தாலி செயின் பறித்துச்சென்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*/