விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குண்டு எறிதல், தட்டு எறிதல், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கல்லூரியில் பணியாற்றும் பெரும்பாலான பேராசிரியர்கள் கலகலப்பாக பங்கேற்று போட்டிகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெண் பேராசிரியர்களும் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 10ஆம் தேதி விளையாட்டு தினம் அன்று கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment