வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் ஒரு வார காலத்தில் வந்து சேரும் அதிகாரிகள் தகவல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 May 2022

வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் ஒரு வார காலத்தில் வந்து சேரும் அதிகாரிகள் தகவல்

 

வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் ஒரு வார காலத்தில் வந்து சேரும் அதிகாரிகள் தகவல்.


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5,0 அடியாகும்,


இந்த ஏரி மூலம் 44.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது அதோடு மட்டுமல்லாமல் சென்னை மாநகரத்தின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி உள்ளது வீராணம் ஏரிக்கு பருவமழைக் காலங்களிலும் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் எப்போதும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தான் தண்ணீர் திறக்கப்படும்.

 

ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த தண்ணீர் கல்லணை வந்து சேர்ந்து அங்கிருந்து தண்ணீர் காவிரி   கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்திற்காக அவ்வப்போது திறந்து விடப்படும்


அதிகாரி தகவல்

வழக்கம்போல் கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடலூர் மாவட்டம் அணைக்கரை அணைக்கு வந்து சேரும் அங்கிருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டு நிரப்பப்படும் இன்னும் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் வீராணம் ஏரி நீர்மட்டம் 41.5 அடியாக உள்ளது ஏரிக்கு நீர்வரத்து எதுவுமில்லை சென்னை மாநகர் குடிநீருக்காக 53 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.


 செய்தியாளர். A. பிரகாஷ்

No comments:

Post a Comment

*/