வேப்பூர் பிரைம் பள்ளி அருகே ஸ்கூட்டியில் சென்றவர் தானே கவிழ்ந்து விபத்து, போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

வேப்பூர் பிரைம் பள்ளி அருகே ஸ்கூட்டியில் சென்றவர் தானே கவிழ்ந்து விபத்து, போலீசார் விசாரணை

வேப்பூர் பிரைம் பள்ளி அருகே ஸ்கூட்டியில்  சென்றவர் தானே கவிழ்ந்து விபத்து, போலீசார் விசாரணை  


கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா கச்சிமைலூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சரண்ராஜ்  (வயது 31) இவர் தனக்கு சொந்தமான டிஎண்,91. எக்ஸ் 1705 என்ற எண்ணுள்ள நீலநிற ஹோண்டா ஆக்டிவா  ஸ்கூட்டியில் தனது சொந்த ஊரான கச்சி மைலூர் கிராமத்திலிருந்து  வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


விருத்தாசலம் சேலம் சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அடுத்த  பிரைம் ஸ்கூல்  எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே  சென்று கொண்டிருந்த போது,  நிலை தடுமாறி ஸ்கூட்டி  தானே கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது 


இதில் பலத்த காயமடைந்த  சாரண்ராஜீவிற்கு வேப்பூர் அரசு மருத்துவமனையில்  முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி  மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் 


இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/