கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் வள்ளுவர் சமுதாய மணமாலை நிகழ்ச்சி மற்றும் இலவச அடிப்படை ஜோதிட பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாநில மகளிரணி தமிழ்ச்செல்வி, கஸ்தூரி, தமிழரசி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.
மணமாலை நிகழ்ச்சியில் பங்குபெறும் வரன்களை அறிமுக செய்துவைத்து, சங்க உறுப்பினர்கள் சேர்த்தல், சங்க உறுப்பினர்களுக்கு தாட்கோ மூலம் இலவச வீட்டுமனை பெற்று தருதல், சமூக நலத்துறையினர் வழங்கும் உதவிகளை பெற்று தருதல், பட்டா இல்லாத வீட்டுமனை வைத்துள்ளவர்களுக்கு பட்டா பெற்று ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தூண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மாநிலதலைவர் மதியழகன், செயலாளர் புஷ்பராஜ், பொருளாளர் அருணகிரி,மாநில இளைஞரணி தலைவர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், கடலூர் மாவட்ட தலைவர் பசுபதி நாயனார், செயலாளர் சரவணன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment