கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஏ.கொளப்பாக்கம் கிராமம், இக்கிராமத்தில் உள்ள கோமுகி ஆற்றில் மணல் திருடுவதாக வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது
அதனை தொடர்ந்து அவ்வூர் கிராம நிர்வாக அலுவலர் ராகுல் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கோமுகி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் தனசேகரன் என்பவர் கடத்தி செல்வதற்காக 3 யூனிட் மணலை குவித்து வைத்திருந்தார்.
அதனை கைப்பற்றிய விஏஒ ராகுல், கிராம உதவியாளரிடம் மணலை பாதுகாக்க உத்திரவிட்டார், கிராம உதவியாளர் சாப்பிட சென்றபோது மேற்படி குவித்து வைக்கபட்டிருந்த 3 யூனிட் மணலை தனசேகரன் கடத்தி சென்றார்
இது குறித்து தகவலறிந்த விஏஒ, ராகுல் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மணலை திருடி சென்ற தனசேகரனை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment