கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் மகேந்திரா பைனான்ஸ் உள்ளிட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கந்து வட்டி கொடுமைகளை கண்டித்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்னை இந்திரா காந்தி சாலை அருகில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப.நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் பண்ருட்டி தொகுதி தலைவர் வழக்கறிஞர். இரா.சந்தனகுமார், பொதுச் செயலாளர் இரா.நிர்மல்குமார், பொருளாளர் வீரசுந்தரம் இளைஞரணி அமைப்பாளர் ஆ.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர தலைவர் ம. மணி வரவேற்புரை ஆற்றினார்.
மக்கள் போராளி க.திருவள்ளுவன் மக்கள் தொண்டன் சு. திருமாறன், வழக்கறிஞர் இரா. வைத்தீஸ்வரன் கிழக்கு மாவட்ட தலைவர் தணிகைச்செல்வன், மேற்கு மாவட்ட தலைவர் அ.அய்யாசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்முருகன், மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.அருட்செல்வன்,மாவட்ட பாம்செப் அமைப்பாளர் க.அருள்மொழி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நெய்வேலி சட்டமன்ற நிர்வாகிகள் ப.ஐயப்பன், கனகராஜ், த.ஏழுமலை, பழனி., வை.சங்கர், இரா.ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற நிர்வாகிகள் த.மோகன்தாஸ், கருணாகரன், வே.சத்தியசுந்தரம், செல்வராசு, த.விக்னேஷ், பண்ருட்டி நகர நிர்வாகிகள் புகழேந்தி, பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்..


No comments:
Post a Comment