கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம், மாதம் ரூ.3,000/-) பணியிடங்கள் ஆண்-12, பெண்-07 நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
அரசு விதிகளின் படி முன்னுரிமை பெற்றவர், முன்னுரிமை பெறாதவர் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 01.07.2022 தேதியில் SC/ST - 18 முதல் 35, BC, BCM, MBC& DNC - 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதியுடைய நபர்கள் www.cuddalore.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களை அறிந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2ஒட்டி அதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அறை எண்: 304) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.05.2022, திங்கள் கிழமை அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
கால தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும்முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றினை பரீசீலிக்க இயலாது. அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றினை அரசு பரிசீலிக்க இயலாது எனவும், அதற்கு மனுதாரரே முழு பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையவர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் பகுதி நேர துப்புரவு பணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

No comments:
Post a Comment