போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு- கடலூரில் பரபரப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு- கடலூரில் பரபரப்பு

கடலூர், பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ளது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். தற்போது இது செயல்படாமல் உள்ளது. கடந்த தானே புயலால் இந்த சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்பட்டதால் ஆலையின் பயன்பாட்டுக்கான இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஆலை வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் அங்குள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடிக்க அடிக்கடி கொள்ளையர்கள்  வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.


அப்போது சுமார் 20 கொள்ளையர்கள் 6 போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்த நிலையில் அதிஷ்டாவசமாக போலீசார் தப்பினர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/