காட்டுமன்னார் கோயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வது வட்ட மாநாடு நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

காட்டுமன்னார் கோயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வது வட்ட மாநாடு நடைபெற்றது

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வது வட்ட மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் செல்வராஜ் கீழக்கடம்பூர் கிளை செயலாளர் சிதம்பரம் குறுங்குடி செயலாளர் சஞ்சயன் குமராட்சி நகர செயலாளர் காந்திதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.


சிறப்பு அழைப்பாளர் ஆகவும் அரசியல் விளக்கவுரை ஆற்றுவதற்கும் மாநில நிர்வாகக்குழு டீ மணிவாசகம் மாவட்ட செயலாளர் துரை மற்றும் மாவட்ட நிர்வாகக்குழு நாகராஜன் மாவட்ட குழு ஏகே சுப்ரமணியன் வட்ட செயலாளர் முருகவேல் கலந்துகொண்டு கட்சிப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது


தீர்மானமாக காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் தானிய சேமிப்புக் கிடங்கு மற்றும் உலர் களம் அமைத்திட வேண்டும்.


காட்டுமன்னார் கோயிலில் தொழில்பேட்டை அமைத்துக் கொடுக்கவும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து தொழிற்பேட்டையில் வேலை கொடுக்கவும் வேண்டும்.

ஏரி குளம் குட்டை வாய்க்கால் தூர்வாரி ஆழப்படுத்த பணி செய்ய வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள சட்ட விதிகளை ஊழல் முறைகேடுகள் இல்லாமல் 100 நாட்கள் வேலைத் திட்டமாக உயர்த்தின சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும் மற்றும் வேலை நேரம் காலை 9 மணி ஆக அறிவித்திட வேண்டும்.

காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் வீராணம் ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் பருவத்திற்கு ஊழல்  இல்லாமல் மீன் குஞ்சு வளர்த்து விடுக.

காட்டுமன்னார் கோயிலில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் சிபிஎஸ்இ வகுப்பு நடைபெறுகின்ற பள்ளிகளில் அனுமதி சான்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.

 என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நிகழ்ச்சியில் வட்டக் குழு கிளை செயலாளர்கள் காந்தி பூபாலன் ராமலிங்கம் இளங்கோவன் முருகையன் கருப்பையன் கோதண்டராமன் பழனிவேல் தமிழ்மணி சேதுராமன் சிதம்பரம் அஞ்சலி கார்த்திகேயன் மகாராஜன் குஞ்சிதபாதம் கிருஷ்ணமூர்த்தி நாகராஜன் அழகேசன் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/