குறிஞ்சிப்பாடி மருத்துவ சேவை அறக்கட்டளை புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் குறிஞ்சிப்பாடி எஸ்.டி.எஸ் திருமண மண்டபத்தில் குறிஞ்சிப்பாடி மருத்துவ சேவை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா கலந்து கொண்டார்.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சௌஜன்யா, டாக்டர் கிசாந்த், டாக்டர் அன்புமணி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் மண்டல உரிமையாளர் சச்சிதானந்தம் முன்னிலையில், பொருளாளர் ஆனந்த பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் பிரபு ராஜ், செயலாளர் குமார், உறுப்பினர் அன்புமணி, டைல்ஸ் ராமலிங்கம், ராஜபெருமாள், அருள் பிரசாந்த், சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் 180 ற்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

No comments:
Post a Comment